Loading...

Subscribe

Join our newsletter & stay updated

 
‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர்
By VikatanExclusive on April 5, 2017
‘வால்ட் டிஸ்னிதான் இன்ஸ்பிரேஷன்!’ - யூ- டியூப் சக்சஸ் கதை சொல்கிறார் ChuChu Tv வினோத்சந்தர்
By VikatanExclusive on April 5, 2017

சினிமா, தொலைக்காட்சி, இணையம் என எல்லா இடங்களிலுமே குழந்தைகளுக்கான உலகமும், வணிகமும் தனி. வால்ட் டிஸ்னி போன்ற ஜாம்பவான் நிறுவனங்கள் குழந்தைகளுக்கு என்றே பிரத்யேக சினிமாக்களை, கதாபாத்திரங்களை உருவாக்கி ஹிட் அடித்தன. அதுபோலவே யூ-டியூபில் குழந்தைகளுக்கான அனிமேஷன் வீடியோக்கள் மட்டுமே வைத்துக் கொண்டு உலகளவில் கலக்கி வருகிறது சென்னையில் இயங்கிவரும் chuchu டிவி. இவர்களின் யூ-டியூப் சேனலுக்கு உலகம் முழுக்க இருக்கும் குழந்தைகள் ரசிகர்களாக இருக்கின்றனர். இந்தியாவில் அதிக சந்தாதாரர்கள் கொண்ட யூ-டியூப் சேனல்களின் வரிசையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது இவர்களின் சேனல். உலகம் முழுக்க இருக்கும் டாப் 15 யூ-டியூப் சேனல்களில் எப்போதும் chuchu டிவிக்கு இடம் உண்டு. இவர்களின் ஜானி ஜானி எஸ் பாப்பா வீடியோ இதுவரை எவ்வளவு வியூஸ் வாங்கியிருக்கிறது தெரியுமா? 100 கோடி பார்வையாளர்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது அந்த வீடியோ.

குழந்தைகளை அனிமேஷன் பாடல்கள் மூலம் கட்டிப்போடும் வெற்றி சூட்சுமத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் chuchu டிவியின் நிறுவனர் வினோத் சந்தர். இவர் மறைந்த தமிழ் இசையமைப்பாளர் திரு.சந்திரபோஸ் அவர்களின் மகன்.

“2013-ல் நானும் எனது நண்பர்களும் ஒரு ஐ.டி நிறுவனத்தை நடத்திவந்தோம். நான், கிருஷ்ணன், சுப்பிரமணியன், அஜித் டோகோ, சுரேஷ் என நாங்கள் ஐந்து பேரும் 30 வருட நண்பர்கள். நாங்கள் ஒன்றாக அந்த நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தோம். அத்துடன் எனது அப்பா மூலம் எனக்கும் இசையில் ஆர்வம் இருந்ததால், அவ்வப்போது சிறிய அளவில் இசையமைத்து ஜிங்கிள்ஸ் எல்லாம் கூட வெளியிட்டு வந்தோம். 2006-ல் இருந்தே யூ-டியூபில் வீடியோக்கள் வெளியிட்டு வந்ததால் எனக்கு யூ-டியூப் நன்கு பரிச்சயமான ஒன்று. அப்போது ஒருநாள் என் மகள் ஹர்ஷிதாவுக்காக, அவளை மகிழ்விக்க நானே ஒரு அனிமேஷன் வீடியோ தயார் செய்தேன்; அதனை ஹர்ஷிதாவிடம் காட்டிய போது, மிகவும் சந்தோஷப்பட்டார்.

அப்போதுதான் என் வீடியோ குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை கண்டுகொண்டேன். பிறகு முதல் முயற்சியாக chubby cheeks என்ற ரைம்ஸை யூ-டியூபில் வெளியிட்டேன். எனது மகளின் செல்லப்பெயர் chuchu என்பதால், அதே பெயரிலேயே சேனல் ஒன்றை துவங்கி அதனை வெளியிட்டேன். இரண்டே வாரத்தில் அந்த வீடியோவை 3 லட்சம் பார்த்திருந்தனர். எனக்கே அது ஆச்சரியமாக இருக்கிறது. சரி.. இதற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது என நினைத்து அடுத்தது டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார் ரைம்ஸை அனிமேஷனாக வெளியிட்டேன். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த ஒரு வீடியோ மூலமாகவே சுமார் 50 ஆயிரம் பேர் எங்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்தார்கள். வெறும் 2 வீடியோக்கள் மட்டும்தான் வெளியிட்டிருந்தோம். ஆனால் அதற்கே பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. அப்போதுதான் இது எங்களுக்கு நல்ல யோசனை எனத் தோன்றியது.

உடனே எங்களுக்கு யூ-டியூப் நிறுவனத்திடம் இருந்து அழைப்பு வந்தது. ‘உங்கள் வீடியோக்கள் அருமையாக இருக்கிறன. அதில் ஏதோ ஒரு விஷயம் ஸ்பெஷலாக இருப்பதால், நல்ல வரவேற்பு இருக்கிறது. தொடர்ந்து செய்யுங்கள்’ என்றனர். உடனே நானும் எனது நண்பர்களும் இதனை முழுமுயற்சியாக செய்யலாம் என முடிவெடுத்து இறங்கினோம். முதலில் 2 அனிமேஷன் கலைஞர்கள், 2 ஓவியர்கள் என்று சிறிய அளவில்தான் களமிறங்கினோம். தற்போது எங்கள் நிறுவனத்தில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். ஒரு மாதத்திற்கு 6 முதல் 7 வீடியோக்கள் வரை வெளியிடுகிறோம்.

முதலில் ‘பாபா பிளாக்ஷீப்’ பாடலைத்தான் அனிமேஷனாக வெளியிட்டோம். பல இடங்களில் அந்தப் பாடல் தடை செய்யப்பட்ட ஒன்றாக இருந்தது. அதில் பிளாக்ஷீப் என மட்டுமே வருவதால் இனவெறியின் அடையாளமாக கருதினர். அதனை மாற்றும் படி, கறுப்பு ஆடுடன், ஒரு வெள்ளை மற்றும் பிரவுன் நிற செம்மறி ஆடையும் சேர்த்து பாடலை மாற்றி வெளியிட்டோம். அதற்கு அமோக வரவேற்பு இருந்தது. அதேபோல ஜேக் அண்ட் ஜில் எனும் பாடலையும் அப்படியே அனிமேஷனாக மட்டும் மாற்றாமல் எங்கள் ஸ்டைலில் பதிவேற்றினோம். இப்படி ஒரு பாடலை அப்படியே பதிவேற்றாமல் எங்கள் ஸ்டைலில் மாற்றி வெளியிட்டதால் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பினர்.

எங்கள் அனிமேஷன் பாடல்களில் சூச்சு என்ற கதாபாத்திரத்தை முதலில் உருவாக்கினோம். பின்னர் சாச்சா என்னும் கதாபாத்திரம். இவர்கள் வெள்ளை நிறமுள்ள குழந்தைகள். இந்த இரு கதாபாத்திரங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தாலும் கூட, ‘பல அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சில கோரிக்கைகள் வந்ததன. உங்கள் கதாபாத்திரங்களில் கறுப்பு நிறமே இடம் பெறாதா என அவர்கள் கேட்டனர். உடனே சிக்கு மற்றும் சிக்கா என இரு கறுப்பு நிறமுடைய கதாபாத்திரங்களையும் சேர்த்தோம். பிறகு அதனை நிறைய பேர் பாராட்டினார்கள்.

2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எங்கள் சேனலை துவங்கினோம். முதல் வீடியோவை வெளியிட்டு 3 மாதங்கள் கழித்துதான், 2-வது வீடியோவை வெளியிட்டோம். பிறகு 2014-ம் ஆண்டுதான் இதில் முழு வீச்சோடு களமிறங்கினோம்.  எனது வீட்டிலேயே எனது மகள், மகன் என இருவர் இருப்பதால் அவர்களுக்கு எது பிடிக்கும் என்பதை என்னால் எளிதாக கணிக்க முடிகிறது. அனிமேஷன் பாடல்களுக்கு இசை அமைப்பது எனது வேலை.  எனது நண்பர் கிருஷ்ணன் பாடல்களின் வரி மற்றும் அதன் கருத்தில் கவனம் செலுத்துவார். அஜித் டோகோ, சட்டரீதியான விஷயங்களை பார்த்துக் கொள்வார். சுரேஷ் நிறுவனத்தின் மனிதவளத் துறையை கவனித்துக் கொள்வார். சுப்பிரமணியன் நிதி நிர்வாகத்தை பார்த்துக் கொள்வார். நாங்கள் 5 பேருமே குழந்தைகளின் விருப்பத்தை எளிதில் புரிந்து கொள்பவர்கள். எனவே குழந்தைகளுடன் நன்கு பழகிவிடுவோம். அதுவே எங்களுக்கு ஒருவகையில் கைகொடுக்கிறது என நினைக்கிறேன்.

தற்போது இரண்டு யூ-டியூப் சேனல்களை வைத்திருக்கிறோம். முதலாவதில் 65 லட்சத்திற்கு மேற்பட்டோரும், இரண்டாவதில் 17 லட்சம் பேரும் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். ஆசிய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான யூ-டியூப் சேனலில் நாங்கள் முதலிடத்தில் இருக்கிறோம். உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கிறோம். குழந்தைகள் என இல்லாமல் பொதுவானவர்களுக்கான பிரிவில் டாப் 15 இடங்களுக்குள் இருந்து வருகிறோம். அதேபோல இந்தியாவில் அதிகம் பேர் சந்தாதாரர்களாக இருக்கும் யூ-டியூப் சானலில் நாங்கள் 3-வது இடத்தில் இருக்கிறோம். யூ-டியூபை பொறுத்தவரை ஒரு வீடியோவை பார்க்கும் மக்களின் எண்ணிக்கை மற்றும் பார்க்கும் நேரம் ஆகியவைதான் முக்கியம். அந்த வகையில் நாங்கள்தான் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கிறோம். எங்களின் பார்வையாளர் குழந்தைகள்தான் என்பதால், ஒரே வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்கின்றனர். இதனால் பார்க்கும் நேரம் அதிகரிக்கிறது. இது எங்களுக்கு பலம்.

2014-ம் ஆண்டு இந்த சேனலை துவங்கும் போதே, மற்றவை போல சாதரணமாக இல்லாமல் வித்தியாசமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே எங்கள் லட்சியமாக இருந்தது. எங்களின் நோக்கமே குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்களை, சிந்தனைகளை பரப்ப வேண்டும் என்பதுதான். உலகம் முழுக்கவும் நல்ல விஷயங்கள் என்பவை பொதுவானவைதான். எனவே எங்கள் வீடியோக்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்று குழந்தைகள் மத்தியில் நல்ல எண்ணங்களை வளர்த்தால்தான் அவர்கள் வருங்காலத்தில் நல்ல மனிதர்களாக இருப்பார்கள். அதுதான் எங்கள் லட்சியம். எங்கள் குழந்தைகளுக்கு எதுவெல்லாம் நல்ல விஷயங்கள் என சொல்லித் தருவோமோ, அதையேதான் எங்கள் வீடியோ மூலம் உலகம் முழுக்க பரப்புகிறோம்.

ஒரு வீடியோ உருவாவதற்கு பின்பு, எழுத்து, கதை, காட்சி அமைப்பு, அனிமேஷன், ஓவியம் என 12 பேரின் உழைப்பு இருக்கும். கிட்டத்தட்ட ஒரு படத்தை இயக்குவது போலத்தான் இதுவும். தற்போது ஆங்கிலத்தில் மட்டும்தான் எங்கள் வீடியோக்கள் இருக்கின்றன. விரைவில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வீடியோக்களை வெளியிட திட்டமிட்டுள்ளோம். அத்துடன் லைவ் வீடியோக்கள், பொம்மைகள், தொடர் கதைகள், ஆகியவற்றையும் வெளியிட முடிவு செய்துள்ளோம்.

எங்களுக்கு இந்தியாவில் இருப்பதை விடவும், அமெரிக்காவில் இன்னும் பார்வையாளர்கள் அதிகம். அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், கனடா, வியட்நாம் போன்றவை எங்களின் டாப் பார்வையாளர்கள் கொண்ட நாடுகள். உலக அளவில் குழந்தைகள் என்பவர்கள் ஒரே மாதிரிதான் என்பதால், எங்களுக்கு நாடு என்பது ஒரு எல்லையே கிடையாது” என்றவர் யூ-டியூப் உதவியுடன் சாதித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

 

More Articles

 • How ChuChu TV is reinventing kids’ entertainment

  By Kohli-Khandekar on  August 14, 2017

  It started simply enough. Vinoth Chandar wanted to amuse his two-and-a-half-year-old daughter Harshita, affectionately nicknamed ChuChu. That is how the Chennai-based techie made an animation character based on her. It sang nursery rhymes and songs, and his daughter loved them; but so did thousands of kids from around the world when he uploaded a couple of videos on the Web in 2013. Chandar then got together with four friends to set up ChuChu TV Studios. B M Krishnan rewrote the lyrics of...

   
 • Humpty Dumpty Too Traumatic? In This More Sensitive Version, He Survives

  By Eric Bellman on  September 24, 2017

  Like many Indians, B.M. Krishnan grew up with both local and Western nursery rhymes. Even as a child, he figured the English ones just didn’t make much sense. The tale of the downfall of Humpty Dumpty—universally and perplexingly portrayed as a giant egg with limbs—still upsets him. “It is saying something cannot be fixed, cannot be repaired. That is not something you tell a child,” Mr. Krishnan complains. “Why should Humpty be like that? So pathetic. Let him go to the doctor...

   
 • Fast train to success

  By Anjana Vaswani on  October 8, 2017

  Little Miss Muffet earns a pat on the back for facing her fears, Humpty Dumpty learns from his fall, and the wall is cordoned off to prevent future mishaps, and undeterred by their first experience, Jack and Jill resume their trek up that hill with their heads held high because "where there's a will, there's a way." These are the altered plots of just some of the animated nursery rhyme videos that have made four-year-old YouTube channel ChuChu TV something of a worldwide sensation. "All videos...

Comments  Show comment Form

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Or

*

Support